• Dec 26 2024

நாக சைதன்யாவின் புது வாழ்க்கை எப்படி இருக்கும்? பிரபல ஜோசியர் பகிர்ந்த போஸ்ட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருப்பது தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்த  தகவல்கள்.

கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தாலும்  நேற்றைய தினம் அதை உறுதி செய்யும் வகையில் நாகார்ஜுனா தனது எக்ஸ் தள  பக்கத்தில் தனது மகன் நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தத்தை பற்றிய புகைப்படத்தையும் பதிவையும் பதிவிட்டு இருந்தார்.

2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பின்பு இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பிலிருந்து கொடுத்த பல கோடி தொகைகளையும் சமந்தா வேண்டாம் என்று உதறி  தள்ளிவிட்டு சென்றார். அதன் பின்பு நாக சைதன்யா சோபிதாவை மீட் பண்ணி டேட் பண்ணி தற்போது நிச்சயதார்த்தமும் செய்து கொண்டுள்ளார்.


இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான நபரான ஜோசியர் வேணு சுவாமி தெலுங்கில் மட்டும் இல்லாமல் ஆந்திராவிலே பிரபலமான ஜோசியராக காணப்படுகின்றார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் ஜாதகங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்க போகின்றது என்பதை கூறப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வார்கள் என்று கணித்து சொன்னவர் . இதனாலேயே இவரது   பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Advertisement

Advertisement