• Dec 27 2024

அர்ச்சனா மீது ஏன் இவ்வளவு வன்மம்? தன் மரியாதையை இழக்கும் விசித்ரா! வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் டீம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 60  நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது.

இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் இடையே, பல்வேறு சண்டைகள், குழப்பங்கள், காதல், போட்டி, பொறாமை என தொடர்ந்தாலும், சில நேரங்களில் அவைகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளன.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள அர்ச்சனா மீது இருக்கும் வன்மத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார் விசித்ரா.

அதன்படி, அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த பின்பு தான் விசித்ராவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. அதற்கு காரணம் அர்ச்சனாவுடன் சேர்ந்து அவர் தைரியமாக ஏனைய போட்டியாளர்களை எதிர்க்க துணிந்ததும், நேர்மையாக பேசி விளையாடியதும் தான்.


இதை தொடர்ந்து, அர்ச்சனாவை தன் கூடவே வைத்து வழி நடத்தி வருவது போல இருவரும் நெருக்கமாகவே இருந்தார்கள். 

எனினும்,  விசித்ரா திடீரென மாயா கேங்க்கு மாறி அர்ச்சனாக்கு எதிராக  ஏட்டிக்கு போட்டியாக செயற்படுகிறார். அவரை பற்றி புரளி பேசுகிறார். இதனால் தற்போது மக்கள் மத்தியில் விசித்ராவுக்கு இருந்த வரவேற்ப்பு குறைந்து விட்டது.


இவ்வாறான நிலையில், நிக்சன், விசித்ரா, கூல் சுரேஷ் ஆகியோர் அர்ச்சனாவின் கட்டிலில் இருந்து பேசிக் கொண்டு இருக்க, எதிர்  பாராத விதமாக இது அர்ச்சனாட கட்டில் என கூல் சுரேஷ் சொல்லுகிறார்.

இதையடுத்து உடனடியாக எழுந்த விசித்ரா, எனக்கு இதுல இடம் போதாது..கதிரை இல்லையா என பேசுகிறார்.

இவ்வாறு, அர்ச்சனா மீது இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார் விசித்ரா. இவரின் திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் ரசிகர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.


Advertisement

Advertisement