• Dec 27 2024

நான் அர்ச்சனாவா மாறினா.. இட்லி துணிய வச்சு வாய அடைச்சிடுவன்! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க விக்ரம்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் வெளியான ப்ரோமோ ஒன்றில் ஏனையவர்கள் போல தாம் விடியும் போது மாறினால் என்ன செய்வோம் என ஒவ்வொருவரும் சொல்லுகின்றனர்.


அதன்படி முதலில் பேசிய அர்ச்சனா, நான் பூர்ணிமாவா முழிச்சிட்டன் என்றா.. உடனே முதல்ல போய் மாயா கேங்க்கு ராஜினாமா கடிதம் கொடுத்து அந்த கேங்ல இருந்து வெளிய வந்திடுவன்.. மாயா உங்கள எனக்கு பிடிக்கும்..ஆனா... எதுவா இருந்தாலும் வெளிய போய் பாப்பம் என மாயாக்கு சொல்லுவன் என கூறினார்.

இதை தொடர்ந்து ரவீனா, நான் மாயாவா முழிச்சன் என்றா.. எல்லாருக்கும் இடையில சண்டைய போட்டு அடிச்சுக்கோங்கடா என விட மாட்டன். என்னோட நல்ல தன்மைகளை வெளிட்டக்காட்டுவன் என சொல்லுகிறார்.

இதையடுத்து விக்ரம், நான் அர்ச்சனாவா மாறினா... எல்லாரோட காது கிட்டயும் போய் கத்தி அவங்கள செவிடு ஆக்கிடுவன்..சத்தமா பேசுவன்... எல்லாருக்கும் நல்லது பண்ணனும் என்டா இட்லி துணிய எடுத்து வாயில அடைச்சிடுவன் என கிண்டல் பண்ணுகிறார் விக்ரம்.


Advertisement

Advertisement