• Apr 04 2025

விஜயை சந்தித்த "டிராகன்" இயக்குநர்..! புதிய கூட்டணி இணையுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையின் பல பிரபலங்களும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "டிராகன்" படம் மாபெரும் ஹிட் ஆகி ரசிகர்களிடையே பிரபலமானது. 


இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு இயக்குநர் அஸ்வத் தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் "விஜய்யை பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டது. விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்ற என் கனவு கடின உழைப்புடன் இருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும் "அவர் எதிரில் அமர்ந்த போது எனக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. 'GREAT WRITING BRO' என்று விஜய் சொல்லியிருக்கிறார். அது போதும்" எனமகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


மேலும் அஸ்வத் மாரிமுத்து விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் கனவு இன்னும் நிறைவேற வாய்ப்பிருக்கும் என்று மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement