• Jan 20 2025

பிக்பாஸின் அடுத்த சீசனை விஜய் சேதுபதி தொடர்வாரா? விஜய் டிவி தரப்பினர் அதிரடி தகவல்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்றைய தினத்தோடு முடிவுக்கு வந்தது. இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றதோடு அவருக்கு சுமார் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு சீசனங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது  சீசன் ஆரம்பிக்கப்படும் முன்பு அவர் திடீரென விலகி இருந்தார். அதற்குக் காரணம் அவர் ஏஐ டெக்னாலஜி தொடர்பிலான படிப்பை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு சென்றது தான்.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி களம் இறங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் தனது முதலாவது எபிசோட்டில் அனைவரும் வியக்கும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.


எனினும் நாளடைவில் விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களை அசிங்கப்படுத்துவதாகவும் அவர்களை பேச விடாமல் தனது கருத்தை மட்டும் பகிர்வதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் சுவாரஸ்யம் அற்றவர்களாக காணப்பட்டார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஒன்பதாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அதன்படி கடந்த ஏழு சீசன்களிலும் இல்லாத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனுக்கு தான் அதிகளவான பார்வையாளர்கள் மற்றும் வாக்குகள் கிடைத்து உள்ளதாக விஜய் டிவி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. 

மேலும் விஜய் சேதுபதி அடுத்த சீசனிலும் தொகுப்பாளராக தொடர்வார் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement