• Dec 26 2024

ஆயுத பூஜை தினத்தன்று த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு! ஷாக்கான குரூப்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் கட்சித் தலைவராகவும் காணப்படுகின்றார். விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூலில் சாதனை படைத்தது.

இளைய தளபதி விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுகின்றார். இவர் இறுதியாக நடித்த கோட் படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றார். இதற்கு அதிகமாகவும் சம்பளம் கொடுத்து அவரை தமது படங்களில் நடிக்க வைப்பதற்காக தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றார்கள்.


ஆனாலும் தான் தனது 69ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தார் விஜய். அதன் படி தற்போது எச். வினோத் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்று முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திரு நாட்களை மேற்கொள்ளும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கை ஒன்றையும் அழகாக வெளியிட்டுள்ளார் விஜய்.

இதேவேளை நடிகர் விஜய் கட்சித் தலைவர் ஆன பிறகு அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு சிலர் வேணும் என்றே குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதோடு சமீபத்தில் விநாயகர் சதுர்த்திக்கு  விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஒரு குரூப் சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது . தற்போது விஜய் ஆயுத பூஜைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.



Advertisement

Advertisement