• Dec 26 2024

என்ன பண்ணினாலும் பழைய சோறு, பிரியாணி ஆகாது? யாஷிகா புகைப்படங்களின் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் , பிகினி புகைப்படங்கள் என பதிவு செய்து அசத்தி வருவார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் திடீரென அவர் பாவாடை தாவணியில் தமிழர் கலாச்சாரத்துடன் கூடிய உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் யாஷிகா நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் பிரபலமானார் என்பதும் இந்த பிரபலத்தின் காரணமாக சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் திடீரென அவர் ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொண்டதை அடுத்து சில ஆண்டுகள் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இருப்பினும் தற்போது அவர் மீண்டும் திரையுலகில் நடித்து வருகிறார்.

யாஷிகா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் பாவாடை தாவணியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ‘நம்பவே முடியவில்லை’ ’ரொம்ப நாள் கழிச்சு இது போன்ற உடைகளில் புகைப்படம் எடுத்து இருக்கிறீர்கள்’ ’தமிழ் கலாச்சாரத்துக்கு இப்போதுதான் மாறி இருக்கிறீர்கள்’ ’என்ன பண்ணாலும் பழைய சோறு பிரியாணி ஆகாது’ என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

நடிகை யாஷிகா தற்போது ‘இவன் தான் உத்தமன்’, ‘ராஜ பீமா’, ‘சல்ஃபர்’, ‘சிறுத்தை சிவா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


Advertisement

Advertisement