• Oct 26 2024

சூர்யா, தனுஷை அடுத்து பாலிவுட் செல்லும் காமெடி நடிகர்.. த்ரில் படத்தில் ஹீரோ ஆகிறார்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலக பிரபலங்கள் தற்போது பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் சூர்யா, தனுஷ் உள்பட ஒரு சில நடிகர்கள் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சூர்யா, தனுஷை அடுத்து தற்போது தமிழ் காமெடி நடிகர் ஒருவர் பாலிவுட் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போதுகர்ணாஎன்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



அதேபோல் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களை நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக இன்னொரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா, தனுஷை அடுத்து காமெடி நடிகர் யோகிபாபு பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியானஜவான்படத்தில் யோகி பாபுவின் நடிப்பை பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், அவரை ஒரு த்ரில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இந்த படத்தில் யோகி பாபு தான் முக்கிய கேரக்டர் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது பாலிவுட்டிலும் ஹீரோவாக நடிக்க இருப்பதை எடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement