• Dec 26 2024

நீங்களும் என்னை திருடினு தானே நினைச்சீங்க.. ஸ்ருதியிடம் கண்ணீர் விட்டு கதறிய மீனா! முத்துவுக்கு தெரிய வந்த உண்மை?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஸ்ருதியை பார்க்க சென்ற மீனா அவரிடம், ஏன் ஸ்ருதி வீட்டுக்கு வாறீங்க இல்ல என கேட்க, உங்களுக்கு தெரியாதா என கேட்கிறார். அதற்கு, உங்க அப்பா என் மேல திருட்டு பட்டம் கட்டினார். உங்க அப்பா என்னை பிச்சை எடுக்க சொன்னார், என் குடும்பத்தையே தப்பா பேசினார். நீங்க கூட அப்ப பேசாம தானே இருந்திங்க, அப்போ நீங்களும் என்னை திருடி என்று தானே நினைச்சீங்க என சொல்ல, ஸ்ருதி என்ன சொல்லுவது என்று தெரியாமல் நிற்கிறார். மேலும், நீங்க வீட்டுல இல்லாம எல்லாரும் கவலையா இருக்காங்க. அது தான் உங்க வீடு. நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன் இனி உங்க விருப்பம் என சொல்லி செல்கிறார்.

மறுபக்கம் ரவியிடம் பேசிய முத்து, அப்பா பாவம் உன்ன பத்தி யோசிச்சிட்டு இருக்கேர், வீட்டுக்கு வா என சொல்ல, ஸ்ருதி வந்தா தான் வருவேன் என சொல்கிறார். மேலும், ரவியின் நண்பர், ரவி எப்போவோ ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியே வந்து ஹோட்டல் ஸ்டோர் ரூமில் தங்கி இருக்கான் என்ற விஷயத்தை சொல்ல, முத்து ஷாக் ஆகிறார்.


மேலும், உனக்கு என்ன இடமா இல்ல. வீட்டுல தனி ரூம் இருக்கு. இங்க ஏன் கஷ்டப்படுறா வீட்டுக்கு வா என சொல்ல, நான் ஸ்ருதி வரும் போது தான் வருவேன் என சொல்லி கிளம்புகிறார்.

இதை தொடர்ந்து மீனா தனது அம்மா வீட்டுக்கு சென்று அங்கு நடந்தவை பற்றி பேசிக் கொண்டிருக்க, அங்கு இருந்த சத்யா எல்லாம் முத்துவாலத் தானே. முத்துவுக்கு அடிக்கத்தான் தெரியும். அவரை போய் ஸ்ருதி அப்பா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு, அவரால நீ திருடி இல்லை என்று நிரூபிக்க முடிஞ்சிதா? எல்லாம் காசு தான். காசு இருந்தா தான் மதிப்பாங்க. நானும் சம்பாதித்து காட்டுவேன் இது அப்பா மேல சத்தியம் என பாய்ண்டாக பேசுகிறார். இதை கேட்ட மீனா இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகிறான் என ஒரு பக்கத்தில் பயப்படுகிறார்.

இதை அடுத்து ஸ்ருதி ஸ்டுடியோவில் டப்பிங் முடித்துவிட்டு சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணுகிறார். அந்த சாப்பாட்டு ஓடரை  ரவிக்கு கொடுக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement