• Dec 26 2024

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க.. கதறி அழுத கோபி! பாக்கியா கொடுத்த ஐடியா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகாவும் கோபியும் சண்டை போட ஈஸ்வரி என்ன பிரச்சினை என கேட்க, கோபி ஒன்றும் சொல்ல வேண்டாம் என சைகை காட்ட, ராதிகா ஒன்றும் இல்லை என சொல்லி செல்கிறார்.

ஆனாலும், ராதிகா போனபின்பு சின்ன பிரச்சினை தான் ஆனா ராதிகா கார்ல ஏறினதுல இருந்து பேசிக்கிட்டே வார என சொல்ல, ஈஸ்வரி ராதிகாவை மீண்டும் அழைத்து ஏன் கோபிக்கு பேசினா என கேட்கிறார்.


அதற்கு ராதிகா, உங்க பிள்ளை என ஒழுங்கா என கேள்வி மேல் கேள்வி கேட்டு, இறுதியில் அவர் ஆபீஸ் இழுத்து மூடின விஷயத்தை சொன்னாரா என கேட்க, எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதையடுத்து, கோபி தனது நிலைமையை சொல்லி அழ, ஈஸ்வரியும் கோபியை நினைத்து அழுகிறார்.

அதன்பின், கோபி போனில் ஒருவரிடம் ரொம்ப கஷ்டமா இருக்கு வேலை வேண்டும் என பேசிக் கொண்டு இருக்க, இதைக் கேட்ட பாக்கியா எங்க ரெஸ்டாரண்ட்ல மேனேஜர் வேலைக்கு வாரீங்களா என கேட்க, கோபி கோவப்படுகிறார்.

மேலும், நான் இன்னும் அந்த அளவுக்கு போகல, என சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு ராதிகாவும் வருகிறார். அப்போது பாக்கியா தனது ரெஸ்டாரண்ட்க்கு வேலைக்கு சொன்ன விஷயத்தை சொல்லி பேசுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement