• Dec 26 2024

சினிமாவுக்கு வரும் யூடியூப் திரை விமர்சகர்.. முதல் படமே நயன்தாரா.. இயக்குனர் யார் தெரியுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

யூடியூபில் திரை விமர்சனங்கள் செய்து, நட்சத்திரங்களை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த ஒருவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளதாகவும் அதுவும் அவரது முதல் படமே நயன்தாரா நடிக்கும் படம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இன்டர்நெட் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு குறிப்பாக யூடியூப் என்ற செயலி வந்த பிறகு கையில் ஒரு போன் மற்றும் இன்டர்நெட் கனெக்சன் இருந்தாலே அவர்கள் திரைவிமர்சகர்களாக மாறிவிடுகின்றனர். ஒரு திரைப்படம் வெளியான சில மணி நேரங்களில் யூடியூபில் திரை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே படத்தில் உள்ள நிறை குறைகளை உண்மையாக எடுத்துச் சொல்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும் மற்றவர்கள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நல்ல படத்தை மோசமாகவும் மோசமான படத்தை நல்லதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.



அந்த வகையில் பார்வையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள திரை விமர்சகர் ஒருவர் பரத்வாஜ் ரங்கன். இவர் ஒரு திரைப்படத்தில் உள்ள நிறை, குறை ஆகிய இரண்டையும் மிகச் சரியாக சொல்வார் என்று கூறப்படும் நிலையில் தற்போது இவர் ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சர்ஜுன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா ‘ஐரா’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement