• Dec 24 2024

மீண்டும் மீண்டும் சிக்கலில் யூட்டியூபர் இர்பான்! மன்னிப்பு கேட்டு மருத்துவமனைக்கு கடிதம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல யூட்டியூபர் இர்பான் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். தந்து யூடுப் தளத்தில் சாப்பாடுகள் சாப்பிட்டு வீடியோ போடுவது போன்ற பல விடீயோக்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தனது மக்களில் தொப்புள் கோடி வெட்டியது தொடர்பாக சிக்கலில் மாட்டியுள்ளார். 


சமீபத்தில் ரெயின்போ வைத்திய சாலையில் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் குழந்தையின் தொப்புள் கொடிகளை இர்பான் அவர்கள் வெட்டுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றினை இர்பான் தனது யூட்டியூப்பில் பதிவிட்டிருந்தார்.குறித்த வீடியோவிற்கு பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வைத்தியசாலை வேண்டுகோளிற்கு இணங்க வீடியோவினை நீக்கம் செய்யப்பட்டது. 

d_i_a


இதனால் டி எம் எஸ் ஆனது பிரசவம் பார்க்கப்பட்ட குறித்த வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 50,0000 அபராதம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு இர்ஃபான் கடிதம் அனுப்பியுள்ளார். 


எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை, மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன் தொப்புள்கொடி வீடியோ விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இதற்க்கு முன்னர் துபாயில் ஸ்கேன் எடுத்திருந்தாலும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் வெளியிட்டது தவறு. இருப்பினும் அப்போது இர்பான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியம்மை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement