தமிழக சட்டமன்ற அவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் அமளி ஏற்பட்டது. குறிப்பாக "டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்" உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவை பரபரப்பாக காணப்பட்டது. இந்த சூழலிலும் முதலமைச்சர் விஜய் தனது உரையை தொடர்ந்து ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "முதல்வருக்கு பேசத் தெரியவில்லை, பதிலளிக்கத் தெரியவில்லை என்று கூறுபவர்கள், பதிலளிக்கும் நேரத்தில் அதை கேட்காமல் வெளியேறிவிடுகின்றனர்" என விமர்சித்தார். மேலும், மக்களுக்கு பயனளிக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகள் மற்றும் யோசனைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தால், அவற்றை தவெக அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, நக்கல், நையாண்டி மற்றும் தொடர்பில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தவெக கட்சிக்கு எதிராக அவதூறு பரப்புவதோடு மட்டுமல்லாமல், அந்தக் கட்சிக்கு வாக்களித்த மக்களையும் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வெற்றி பெற்ற காலத்திலும் இதேபோன்ற விமர்சனங்களை திமுக முன்வைத்ததாக குறிப்பிட்ட விஜய், "50 ஆண்டுகளாக ஒரே டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார்கள். தொழில்நுட்பம் மாறிவிட்டது; குறைந்தபட்சம் டெக்னிக்கையாவது மாற்றிக் கொள்ளுங்கள்" என்று சாடினார்.
Listen News!