தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்றைய தினம் தன்னுடைய 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் தொண்டர்கள் வரை பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், நடிகர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது. அதில் விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு பற்றி சோபா சந்திரசேகர் மனம் திறந்து பேசி உள்ளார
அந்த வகையில், விஜய்க்கு சிக்கன் பிரியாணி மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எப்போதும் ஆடம்பரமான உணவுகளை மட்டுமே விரும்புவார் என்று இல்லை. வீட்டில் சமைக்கப்படும் எளிமையான உணவுகளையும் அவர் மிகவும் ரசித்து சாப்பிடுவார் என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை விஜய் அதிகம் விரும்புவார் என்றும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் தருணங்களை அவர் முக்கியமாக கருதுவார் என்றும் கூறியிருந்தார்.

விஜயின் உணவு பழக்கங்களில் மற்றொரு முக்கிய அம்சமாக, அவர் எப்போதும் அளவோடு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.
இன்று கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்தாலும், வீட்டில் சாதாரண குடும்ப உறுப்பினரைப் போலவே பழகும் விஜயின் இந்த எளிமையான வாழ்க்கை முறை ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் களைகட்டியுள்ள நிலையில், விஜயின் விருப்பமான உணவு குறித்த இந்த பழைய தகவலும் மீண்டும் வைரலாகி வருகிறது. திரையில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய், நிஜ வாழ்க்கையில் எளிமையை விரும்பும் மனிதர் என்பதை இந்த தகவல் மீண்டும் நினைவூட்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!