பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ முன்னிட்டு ‘காமன் மேன்’ போட்டியாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
தனது வீடியோவில் பேசிய அவர், பிக் பாஸ் என்றாலே பெரிய உருட்டு. அதிலும் ‘காமன் மேன்’ போட்டியாளர் என்ற பெயரில் இன்னும் பெரிய உருட்டு நடக்கிறது போல தெரிகிறது. உண்மையில் சாதாரண மக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், முதலில் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் திடீரென விண்ணப்பங்களை முன்கூட்டியே நிறுத்திவிட்டார்கள். இதனால் ஏராளமானோர் அவசர அவசரமாக விண்ணப்பித்தனர். இப்போது ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும் நிலையில், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உண்மையான காமன் மேன்களை தேர்வு செய்வார்களா? அல்லது ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே மீண்டும் உள்ளே அனுப்புவார்களா? தெலுங்கு, மலையாள பிக் பாஸில் தபால்காரர், கல்லூரி மாணவி, செய்தித்தாள் விநியோகிப்பவர் போன்ற சாதாரண மக்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் தமிழில் அது நடக்குமா? என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காமன் மேன் என்ற பெயரில் மக்களிடம் விண்ணப்பங்களை வாங்கிவிட்டு, இறுதியில் ஏற்கனவே சேனலுக்கு பரிச்சயமானவர்களையே தேர்வு செய்தால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். விண்ணப்பித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பதிலாவது கொடுக்க வேண்டும். தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் காரணம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் குறித்து பேசிய அவர், விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஆனால் காமன் மேன் தேர்வு விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்த முறை உண்மையிலேயே ஒரு சாதாரண மனிதருக்கு வாய்ப்பு கிடைக்கிறதா அல்லது இது வெறும் விளம்பர முயற்சியா என்பது நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் தெரியவரும் என அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Listen News!