• Jun 23 2026

மம்மூட்டியின் நீண்டகால கடின உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

 நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளாக கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள், கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.


இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்புவிழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

திரைப்படத் துறையில் நீண்டகாலமாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 

இந்திய சினிமாவில் பல ஆயிரம் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement