• Apr 29 2026

"3 லெஜண்ட்ஸோட பசங்க ஒன்னா பாடி இருக்காங்க.." Tourist Family இசையமைப்பாளர் பேச்சு...

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

அபிஷாந்த் ஜீவிந் இயக்கத்தில் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குறித்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


இலங்கை தமிழ் குடும்பம் இடம்பெயர்வது போன்ற ஒரு கதைக்களத்தில் படம் அமைத்துள்ளது. படத்தின் trailor வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் ஒன்றினை இசையமைப்பாளர் வழங்கியுள்ளார்.


அதாவது 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் ஒரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா எஸ்.பி.சரண் சார், யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் மூணு பேருமே பாடி இருக்காங்க. 3 லெஜண்ட்ஸோட பசங்க ஒன்னா பாடி இருக்காங்க. அந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷலா வந்து இருக்கு" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement