• Dec 25 2024

ஒரு செல்ஃபிக்கு 30,000 ரூபா? ஹோட்டல்களை விட்டு வெளியேறுங்கள்! தென்னிந்திய பிரபலங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி யாழ் மண்ணில் இடம் பெற்ற நிலையில், தென்னிந்திய பிரபலங்கள் யாழை சென்றடைந்து உள்ளார்கள்.

இந்நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் சென்ற திரைப்பட நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் ஒருவருக்கு 30,000 அறவிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயத்தை வன்மையாக கண்டித்த கட்சித் தலைவர் ஒருவர், அவ்வாறு இந்த செயல்பாடு இடம்பெருமானால் நடிகர், நடிகைகள் தங்கி உள்ள விடுதிகளை முற்றுகை இடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி அவர் வழங்கிய ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்,


வடகிழக்கு மாகாணங்களுக்கு வந்து துயரப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களுடைய மக்களின் மனங்களை, தென்னிந்திய பிரபலங்கள் ஆற்றுப்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. 

ஆனால், இலவசமாக நடன, நடிகைகளையும் பாட்டுக்காரனையும்  கொண்டு வந்துவிட்டு, விஐபிக்கு 27000 ஆயிரம், புகைப்படம் எடுக்க  30,000 ஆயிரம் என்றால் என்ன செய்வது?

மேலும், இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாண கலாச்சாரத்தை சீரழிக்க முனையக்கூடாது. யாழ்ப்பாணத்தில் தமிழர் தொடர்பிலான  ஏகப்பட்ட விடயங்கள் கட்டி காப்பாற்றப்படுகிறது.

ஆனால், இப்போது தென்னிந்திய பிரபலங்களை கூட்டிக் கொண்டு வந்து, இதனை சீரழிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அப்படியே ஏதாவது தவறான விடயங்கள் நடக்குமாக இருந்தால், இந்திய நடிகர், நடிகைகள் தங்கி இருக்கின்ற ஹோட்டல்கள் முடக்கி, அவர்களை வெளியேறச் சொல்லி நாங்கள் கேட்க வேண்டி வரும்.

ஆகவே மீண்டும் தமிழர் தேசத்தில் கலை கலாச்சாரத்தை சீரழிக்காமல்,  தென்னிந்திய பிரபலங்கள் செயற்பட வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement