சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வளர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ். இவருடைய நடிப்பில் வெளியான காஞ்சனா படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது காஞ்சனா படத்தின் நான்காவது பாகம் படமாக்கப்பட்டு வருகின்றது.
பேய் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெறுவதால் காஞ்சனா படத்தின் நான்காவது பாகமும் பான் இந்திய அளவில் ஹிட் கொடுக்கும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.
இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, நோரா பதேகி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா நான்காவது பாகத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிப்பது மட்டுமில்லாமல் இவர் இந்த பாகத்தில் பேயாக நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வெளியான மூன்று பாகங்களை விடவும் இந்த பாகம் அதிகளவில் அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
Listen News!