நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மிராய். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகின்றது. மூன்று நாட்களில் மட்டுமே மிராய் திரைப்படம் சுமார் 80 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே அனுமான் படத்தில் ஆஞ்சநேயர் கேரக்டரில் தேஜா சஜ்ஜா நடித்து ஹிட் கொடுத்த நிலையில், இந்த படத்தில் ராமர் பின்னணியில் வெற்றி பெற்றுள்ளார். கார்த்திக் கட்டமனே இயக்கத்தில் வெறும் 50 கோடி ரூபாய் செலவில் இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிராய் திரைப்படம் காப்பி உள்ளடக்கத்தை கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
56 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடித்த படத்திலிருந்து மிராய் படத்தின் கதையை அப்படியே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி மகாபலுடு என்ற படத்தின் கதையும் மிராய் படத்தின் கதையும் ஒரே மாதிரி உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் ஒரு சிலர் மிராய் படத்தின் கதை, கேரக்டர்கள் வேறு என்று கூறுகின்றார்கள். ஆனால் மற்றொரு தரப்பினர் படத்தின் கதை, மகா படுலு கதையை ஒத்திருக்கிறது என்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிருஷ்ணா நடித்த மகாபடுலு படத்தை யூட்யூபில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆக மொத்தத்தில் குறைந்த பொருட் செலவில் நிறைய பாராட்டுக்களை பெற்ற மிராய் திரைப்படத்திற்கு காப்பி குற்றச்சாட்டுகள் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.
Listen News!