• Dec 26 2024

பாரதி கண்ணம்மாவுடன் ரொமான்டிக் ஹீரோ.. புதிய சீரியலை களமிறக்கியது விஜய் டிவியா? ஜீ தமிழா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

அதிகளவான ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ஏராளம் ரசிகர்கள் உண்டு. 

அதிலும் குறிப்பாக சீரியல்களுக்கு எல்லையில்லாத ரசிகர்கள் கூட்டம் உண்டு. குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பலவும் இதில் ஒளிபரப்பாகிறது. இதனாலோ என்னவோ ஏராளமான ரசிகர்கள் உருவாகிய வண்ணம் உள்ளனர். 

இந்த நிலையில், விஜய் டிவியில் புதிதாக சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுசா மற்றும் ஈரமான ரோஜா சீரியலில் நடித்த சித்தார்த் குமரனும் இணைய உள்ளார்கள்.


பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் வினுசா. இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.


அதேபோல ஈரமான ரோஜா சீரியலில் நடித்த சித்தார்த் குமரனும் ஜீ  தமிழில் ஒளிபரப்பான 'ரெக்க கட்டி பறக்குது மனசு' என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து 'தேன்மொழி பி. எ' தொடரிலும் 'ஈரமான ரோஜாவே சீசன் 2' விலும் நடித்திருந்தார். இந்த சீரியல் அண்மையில் தான் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் கமிட் ஆகியுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்களின் பட்டியலும் தற்போது வெளியாகிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement