• Dec 27 2024

தோழியை காதலித்து கரம்பிடித்த கிஷன் தாஸ்..!! காதலியை இம்பிரஸ் பண்ண ரொமாண்டிக் ஹீரோ செய்த காரியம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியானாலும் இன்றும் பலரது ஃபேவரட்டாக இருக்கும் காதல் திரைப்படம் தான் 'முதல் நீ முடிவும் நீ'.

குறித்த திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் கிஷன் தாஸ் ஆவார். 

இவர் netflix இன் யூடியூப் தளத்தில் "மெனுபிளீஸ்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளதோடு,  இந்த நிகழ்ச்சியில் இவரது கெஸ்ட் ஆக அணில் கபூர், ஐஸ்வர்ய ராய் , துல்கர் சல்மான் என பல பிரபலங்களும் கலந்துகொள்வதனால் இன்றளவிலும் ட்ரெண்டிங்ஸ்டார் ஆகவே இருந்து வருகின்றார். 


இந்த நிலையில், இன்றைய தினம் நடிகர் கிஷன் தாஸ் அவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

எந்தவித ஆடம்பரமும் இன்றி மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் நடந்த இந்த நிச்சயதார்தத்திற்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


சமீபத்தில் தான்  'முதல் நீ முடிவும் நீ' நடிகை மீதாவின் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அதேபோல, தற்போது கிஷன் தாஸும்  திருமணத்திற்கு தயாராகி, தன்னுடைய தோழியை காதலித்து விரைவில் அவரை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது காதலியை இம்பிரஸ் பண்ண பாட்டும் பாடி அசத்தி உள்ளார்.

தற்போது இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement