• Dec 26 2024

தெலுங்கு ஆடியன்ஸ்களுக்கு ரசனையே இல்லையா? ஆந்திராவில் ‘ஆடுஜீவிதம்’ மோசமான வசூல்..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் வெளியான பிரித்விராஜ், அமலா நடிப்பில் உருவான ‘ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் தகவல் வெளியானது.

கேரளா, தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவில் சக்கை போடு போட்டு வரும் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிக குறைவான வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரம் இந்த படம் பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

அழுத்தமான கதை அமைப்பு, நேர்த்தியான திரைக்கதை, பிரித்விராஜின் சூப்பரான நடிப்பு, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு உள்பட பல பாசிட்டிவ் விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால்தான் உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும்  இந்த படம் குறைவான வசூலை பெற்றுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆடியன்ஸ்களுக்கு ரசனையே இல்லையா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். முழுக்க முழுக்க மசாலா படங்களையே பார்த்து பழகிய தெலுங்கு ஆடியன்ஸ்கள் இப்படி ஒரு கவிதைத்தனமான படத்தை கொண்டாட தவறுவது ஏன் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement