• Dec 26 2024

’விக்ரம்’ ‘ஜெயிலர்’ ஃபார்முலாவை பின்பற்றும் ஏஆர் முருகதாஸ்.. ’SK23’ படத்தில் 4 பிரபலங்கள் கேமியோ?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அந்த படத்தில் பிரபல நடிகர்கள் கேமியோ கேரக்டரில் நடித்தது தான் என்று கூறப்படுவதுண்டு.

‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய இரண்டு ஹீரோக்களும் அது மட்டும் இன்றி ஒரு ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்ததும் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



அதே போல் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால். சிவராஜ் குமார். ஜாக்கி ஷெராப், தமன்னா ஆகியோர் கேமியோ கேரக்டரில் நடித்ததால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் கூறப்படுவதுண்டு.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’SK23’ படத்தை இயக்கி வரும் ஏஆர் முருகதாஸ் இந்த படத்திலும் சில பிரபல நடிகர்களை கேமியோ கேரக்டரில் நடிக்க வைக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.



குறிப்பாக ’SK23’ படத்தில் நடிப்பதற்காக சுரேஷ்கோபி, ஜெயராம், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் இரண்டு தமிழ் பிரபலங்களும் கேமியோ கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே ’விக்ரம்’ மற்றும் ’SK23’ பாணியில் ’SK23’ படத்திலும் கேமியோ கேரக்டர்களை புகுத்த ஏஆர் முருகதாஸ் முடிவு செய்திருப்பது புத்திசாலித்தனமானது என்றும் இந்த படத்தின் வியாபாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement