• Dec 25 2024

அமரன் மேடையில் ரோமென்ட்ஸ் செய்த SK-பல்லவி... பொறாமையில் பொங்கிய ஆர்த்தி...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமான இதில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.  இருவருக்கும் இடையே உள்ள காதல் காட்சிகள் அவ்வளவு க்யூட்டாக இருந்தது. இதனாலேயே படத்தை தியேட்டரில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் இருவரும் நடித்து காட்டினார்கள். இயக்குனர் ஆக்ஷன் சொல்ல சாய் பல்லவி மேடையில் முகுந்தே என கூப்பிட்டார். அதற்கு எஸ்கே கீழே அமர்ந்தபடியே ஹலோ மம்முட்டி என கூறினார்.அப்போது அருகில் அவருடைய மனைவி ஆர்த்தியும் இருந்தார்.


சாதாரணமாக அவர் இதற்கு சிரிப்பது போல் இருந்தாலும் முகத்தில் கண நேரத்தில் வந்து போன மாறுதல்களை நம்மால் கவனிக்க முடிந்தது. நிச்சயம் ஒரு மனைவியாக அவருக்கு பொறாமை இருந்திருக்கும். ஆனாலும் இதுவும் ஒருவித ப்ரமோஷன் தான். தற்போது தீபாவளிக்கு ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் போட்டிக்கு வருகின்றன. இதில் யார் ஜெயிப்பார்கள் என பார்ப்போம்.

Advertisement

Advertisement