• Dec 26 2024

ஏன் அந்த புட்டேஜ் காட்டல.. அதை யோசிச்சீங்களா? என்ட கேள்வி இதுதான்! மீண்டும் மாயா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய சீசனாக காணப்பட்டது பிக் பாஸ் சீசன் 7. அதற்கு காரணம் இந்த சீசனின் போட்டியாளராக பங்கு பற்றிய பிரதீப் ஆன்டனிக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது. இதற்கு முன்பு போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு வார்னிங் மற்றும் யெல்லோ கார்ட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் முதன் முறையாக பிக் பாஸ் சீசன் 7ல் தான் ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் முக்கியமானவராக கருதப்பட்டவர் பிரதீப். இவர் பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதன் காரணத்தினால் பிக் பாஸ் டைட்டிலை பிரதீப் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை அனேகமானோருக்கு காணப்பட்டது.

எனினும் இந்த சீசனில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்கள் பிரதீப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். அதிலும் அவர் கதவை திறந்து வைத்துக்கொண்டு பாத்ரூம் போகின்றார், தவறாக பார்க்கின்றார் என்றெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.


இதை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் எந்தவித விசாரணைகளும் இன்றி பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். ஆனால் நாளடைவில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய் குற்றம் என்று உள்ளே இருந்த  போட்டியாளர்கள் நிகழ்ச்சி இருந்து வெளியே வந்ததும் பேட்டி கொடுத்து இருந்தார்கள். இதனால் முழு கோபமும் மாயா, பூர்ணிமா மீது திரும்பியது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பற்றி மாயா தனது கருத்துக்களை கூறி வருகின்றார். ஆனாலும் தற்போது பிரதீப் விஷயத்தை மீண்டும் கிளறியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், பிக் பாஸ் சீசன் 7ல் நிறைய சர்ச்சைகள் இருந்தது. அது ஏன் நடந்தது என்று ஜோசிச்சீங்களா?அந்த புட்டேஜ் ஏன் காட்டல என்று நீங்கள் யோசித்தீர்களா? அவ்வளவுதான் நான் கேட்கின்றேன். இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் எங்களுக்கு ப்ரூப் வேணும் என்று கேட்கின்றீர்கள். அந்த ப்ரூப்பை உங்களுக்கு அவங்க கொடுக்கல அது ஏன் என்று நினைக்கின்றீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. அதை மட்டும் ஜோசியுங்கள் என மாயா மீண்டும் ஒரு புரளியை கிளப்பி உள்ளார்.

Advertisement

Advertisement