விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகள் முதல் இளம்வட்ட ரசிகர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்தும் ஒளிபரப்பாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியலில் தனது குடும்பத்திற்காக வாழும் ஒரு பெண் அதன் பின்பு எதிர்பாராத விதமாக கணவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார். அதற்கு பிறகு அவர் சந்திக்கும் சவால்கள், பிள்ளைகளை வளர்க்கும் விதம், அவரின் முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு எதிராக இருந்த கோபி ஒரு கட்டத்தில் அவர் பாக்யாவின் உதவியால் உயிர் பிழைத்துக் கொள்கிறார். இதனால் தனது பழிவாங்கும் வண்ணத்தை விட்டு குடும்பம் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபராக மாறுகின்றார். இது ராதிகாவுக்கு பெரும் தலை வலியாக மாறுகின்றது.
இதை தொடர்ந்து கோபியை விட்டு விலக முடிவெடுத்த ராதிகா, அதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றா. அந்த வகையில் தற்போது மையூவுடன் வேறு ஊருக்கு கிளம்பி சென்று, கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலுக்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ராதிகா கோபியை விவாகரத்து பண்ணுவதற்காக டிவோசுக்கு அப்ளை பண்ணுகிறார். ஆனாலும் அங்கிருந்த நீதிபதி அவர்களை யோசித்து முடிவு எடுக்குமாறு சொல்லுகின்றார்.
எனினும் ராதிகா தனக்கு கோபியுடன் வாழ விருப்பமில்லை எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொடுங்கள் என உறுதியாக சொல்லுகிறார். இது கோபிக்கு பெரும் அதிர்ச்சியாக காணப்படுகிறது. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
இதேவேளை, இந்த சீரியல் தற்போது சலிப்பை ஏற்படுத்தி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!