• Apr 19 2025

ரெட்ரோ படத்தின் டீசரை திடீர் என வெளியிட்ட படக்குழு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நந்தா , பேரழகன் , ஏழாம் அறிவு மற்றும் அஞ்சான் போன்ற படங்களின் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்து கொண்டவரே நடிகர் சூர்யா. இவர் தனது நடிப்பால் அதிகளவான ரசிகர்களைக் கொண்டதுடன் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும் திகழ்கின்றார்.


அந்தவகையில் சூர்யா சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்   "ரெட்ரோ" என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். அந்தப் படத்தில்  பிரபல ஹாலிவுட் நடிகையான  பூஜா ஹெக்டேயும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெட்ரோ படத்தினை இந்த வருடம் மே மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்பொழுது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கின்ற வகையில் படத்தினுடைய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவும் பூஜாவும் வித்தியாசமான நடிப்பில் நடித்துள்ளார்கள் என்பதனை அறியமுடிகின்றது.



Advertisement

Advertisement