• Jan 14 2025

பிரபல இயக்குநருக்கு விபத்து.. 3 நாள் நினைவு திரும்பவே இல்லை.. நடிகர் மோகன் செய்த உதவி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் அவர் மூன்று நாள் நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நடிகர் மோகன் முக்கிய உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் இயக்குநர்களில் ஒருவர் விஜய்ஸ்ரீ என்பதும் இவர் சாருஹாசன் நடித்த ’தாதா 87’ ’பவுடர்’ ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது அவர் மோகன் நடிக்கும் ’ஹரா’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் விஜய்ஸ்ரீ தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கியதாகவும் அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் அவருக்கு நினைவு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் விபத்து குறித்த தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே மருத்துவமனைக்கு சென்ற மோகன் அவரது மருத்துவ சிகிச்சைகளை உடன் இருந்து கவனித்து கொண்டதாகவும் குடும்பத்தோடு மருத்துவமனைக்கு வந்து மருத்துவ செலவு 16 லட்சம் ரூபாயை மோகன் தான் செலவு செய்ததாகவும் அவருடைய அன்பை தன்னால் மறக்க முடியாது என்றும் விஜய்ஸ்ரீ மிகவும் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

தனது பட  இயக்குனருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஹீரோக்கள் மத்தியில் நடிகர் மோகன் செய்த இந்த முக்கிய உதவி குறித்து கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement