• Dec 27 2024

சன் டிவியில் கேப்ரில்லா நடிக்கும் புதிய சீரியல்.. ஹீரோ இந்த பிரபலமா? டைட்டில் என்ன?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் விரைவில் சில புதிய சீரியல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சன் டிவியில் வெளியாகும் புதிய சீரியலில் ஒன்று கேப்ரில்லா  நடிக்கும் சீரியல் என தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் கேப்ரில்லா ’பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் 102 நாட்கள் இருந்து அதன் பின்னர் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பது தெரிந்தது.

மேலும் கேப்ரில்லா  பல சீரியல்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் அவர் காவியா பார்த்திபன் என்ற முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் இந்த சீரியல் ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தற்போது கேப்ரில்லா நடிக்க இருக்கும் புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிகிறது. இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர் ராகுல் ரவி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இவர் ஏற்கனவே ’கயல்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகுல் ரவி மற்றும் கேப்ரில்லா  நடிக்க இருக்கும் புதிய சீரியலுக்கு உறவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அனேகமாக ’மருமகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முன்னோட்ட வீடியோ சன் டிவியில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement