• Dec 27 2024

10க்கு 10 குட்டி வீட்டில் ஜோதிகா.. இதெல்லாம் யாராலும் செய்ய முடியாது.. இப்படி ஒரு வீடியோ பார்த்ததே இல்லை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ஜோதிகாவும் அவரது கணவர் சூர்யாவும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நிலையில் 10க்கு 10 அளவுள்ள ஒரு குட்டி வீட்டில் ஜோதிகா தங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஜோதிகா ஒரு டிராவல் பிரியர் என்பது தனது குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் அடிக்கடி வெளிநாடு மற்றும் உள்நாட்டுக்கு சுற்றுலா சென்று வரும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்  என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா, எவரெஸ்ட் சிகரத்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு அவர்  சில முக்கியமான இடங்களை பார்த்தது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் உலகிலேயே மிகச் சிறிய ரன்வே கொண்ட விமான நிலையம், உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஹோட்டல் ஆகியவர்களை குறிப்பிட்டு 10க்கு 10 அளவுள்ள ஒரு சின்ன அறையில் தங்கி இருந்ததாகவும் அங்கு மின்சார கூட இல்லை என்றாலும் சோலார் பவர் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில்தான் அவர் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தோழியுடன் ஆட்டம் போடும் காட்சிகள், மலையேறும் ட்ரக்கிங் காட்சிகள், பனி மழையில் நனையும் காட்சிகள், அங்கு இருக்கும் உணவை ரசித்து சாப்பிடும் காட்சிகள், சன்பாத் எடுக்கும் காட்சிகள் உள்ளிட்டவை அந்த வீடியோவில் இருப்பதை அடுத்து இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் இந்த வீடியோவுக்கு ’எனக்கு தெரிந்து எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறிய முதல் நடிகை ஜோதிகாவாகத்தான் இருப்பார் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement