பிரபல இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கண்ணப்பா . இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ்ணு மஞ்சு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்ஷய் குமார் சிவன் கதாபாத்திரத்தில், காஜல் அகர்வால் பார்வதி கதாபாத்திரத்தில்,பிரபாஸ் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.ஏற்கனவே இப்படத்தின் முதல் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது கண்ணப்பா திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.இப் படம் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டீசர் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் இப் படம் பிரபாஸின் பாகுபலி படத்தை விட பல மடங்குகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!