நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை மூலம் பிரபலமாக அறிமுகமாகி பின்னர் சினிமாவிலும் அசத்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான "அமரன்" திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சிவகார்த்திகேயன் தனது நிலையை முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.
இதனால் அவர் விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் என்று பேசப்பட்டது.இப்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் "மாதராசி" மற்றும் சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னனி 90s நடிகர் ஷாம் தற்போது "சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியில் ஷாம் நடுவராக இருந்தார். ஆனால் தற்போது SK அடைந்திருக்கும் உயரம் எவ்வளவு என பாருங்க என பலரும் சொல்கிறார்கள். அவரை பார்த்து எனக்கு பொறாமை எல்லாம் இல்லை. அவர் இவ்வளவு வளர்ந்து இருப்பது எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எல்லாமே கடவுள் அமைத்து கொடுத்த பாதை தான்" என்று ஷாம் கூறியுள்ளார்.
Listen News!