• Dec 26 2024

சக்ஸஸ் ஆனாது ஒன் லைன் ஸ்டோரி... தளபதி 68 படத்தில் நடிகர் சிம்பு... இது என்ன புதுசா இருக்கு... குழப்பத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி 68 திரைப்படம் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகின்றது. லியோ படத்திற்கு பிறகு விஜய் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தன் 68 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


சில வாரங்களுக்கு முன்பு தான் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றர்.


தற்போது தாய்லாந்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும் செய்திகள் வந்தன.


அதைத்தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தின் கதையை பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. என்னவென்றால் வெங்கட் பிரபு நடிகர் சிம்பு சொன்ன ஒன் லைன் ஸ்டோரியை வைத்து தான் தளபதி 68 கதையை உருவாக்கியுள்ளதாக ஒரு தகவல் உலா வருகின்றது. வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.


இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பு கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. அந்த சமயத்தில் சிம்பு ஒரு ஒன் லைன் ஸ்டோரியை வெங்கட் பிரபுவிடம் சொன்னாராம். அந்த ஸ்டோரியை கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் படமாக்கலாம் என முடிவு எடுத்தார்களாம். 


ஆனால் அதனை படமாக்க முடியாமல் போனது. இதையடுத்து அந்த ஒன் லைன் ஸ்டோரியின் மூலம் கிடைத்த ஐடியாவை வைத்து வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் கதையை உருவாக்கியதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், இப்படத்தின் ஜானர் என்னவாக இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Advertisement

Advertisement