• Dec 26 2024

குடும்பத்துடன் விஜகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா! திடீரென நடந்தது என்ன?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்ததற்கு இன்றளவில் மட்டும் தமிழ் நாடே கண்ணீர் சிந்துகின்றது.

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் பலர் அஞ்சலி செலுத்த வரவில்லை என குற்றம் சட்டப்பட்டிருந்தது.

அதிலும் முக்கியமாக அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு நடிகர் வடிவேலு வரவில்லை என்பதோடு, இதுவரையில் ஒரு இரங்கல் செய்தி கூட பகிரவில்லை என ரசிகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நேற்று சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அழுது புலம்பி அஞ்சலி செலுத்தி இருந்தார்.

மேலும், கேப்டன் நினைவிடத்தில் கார்த்தி, சிவகுமார் ஒன்றாகவும், சூர்யா தனியாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனால் மூவருமாக சேர்ந்து விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று, அங்க வைக்கப்பட்டிருந்த கேப்டனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


 

Advertisement

Advertisement