நடிகை கஸ்தூரி சமீபத்தில் ட்ரெண்டாகிய பாடலுக்கு செம எனர்ஜியாக டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்துள்ளார். இதனை சோசியல் மீடியாவில் பார்த்த ரசிகர்கள் பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்லீ தயாரிப்பில் வெளியான பேபிஜான் திரைப்படத்தில் இடம் பெற்ற "நேன் மடக்கா" பாடல் பட்டிதொட்டி எங்கும் பார்க்கப்பட்டு சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டானது. இந்த பாட்டுக்கு பலரும் டான்ஸ் ஆடி வைப் பண்ணிவரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது வீட்டு பால்கனியில் இருந்து இந்த பாடலுக்கு எனர்ஜிட்டிக்க்காக டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அதனைப் பார்த்த இணையவாசிகள் சூப்பர், நல்லா இருக்கு, நீங்கள் இப்போது எப்படி மகிழ்ச்சியாக உள்ளீர்களோ அதேபோல் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். என்று போட்டாலும் சிலர் மிகவும் மோசமான மற்றும் ஆபாசமான கமெண்ட்டுகளை பகிர்ந்துள்ளனர். அதிலும் "எக்காரணம் கொண்டு இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துவிடாதீர்கள், உங்களைப் பிடிக்காதவர் மிகவும் அப்செட் ஆகிவிடுவார்கள்" எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!