அட்லீ தயாரிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம் 'பேபி ஜான்'. கிருஸ்துமஸ் முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் 4 நாட்களில் பெற்றுள்ள வசூல் குறித்து பார்ப்போம்.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியுள்ளார். தேறி படத்தின் ரீமேக் என்பதனால் படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25ம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. தற்போது வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 4 நாளில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த வசூல் கூடுவதற்கும் வாய்ப்பு உள்ளதால் படக்குழு எதிர்பார்த்துகாத்திருக்கிறார்கள்
Listen News!