• Dec 26 2024

உழைக்காமல் 10 லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா? கள்ளச்சாராயம் குடியுங்கள்: நடிகை கஸ்தூரி

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உழைக்காமல் உங்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தேவை என்றால் கள்ளச்சாராயம் குடித்து இறந்து விடுங்கள் என்ற அர்த்தத்த்டில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ள நிலையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல சமூக அக்கறை உள்ளவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்காக நிவாரண நிதி என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

10 லட்சம். விளையாட்டு வீரருக்கா? போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கோ விவசாயிக்கோ வா? குடும்பத்தை கைவிட்டு கள்ளசாராயத்தை குடித்து செத்தவருக்கு. இந்த கேடு கெட்ட dravidamodel லில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையா உழைக்க தேவையில்லை. மொடா குடிகாரனா இருந்தா போதும்.

இதை எப்படி எடுத்து கொள்வது? விற்ற பொருளில் complaint வந்ததால் நஷ்ட ஈடு போலவா? மக்களின் வாயை அடைக்கவா? வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரு கம்பனி கொடுக்கும் கவர்ச்சிகரமான scheme என்றா?  அப்படி என்ன  திமுக அரசுக்கும் விஷச்சாராய கம்பனிக்கும் தொடர்பு?

கஸ்தூரியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement