• Dec 25 2024

'மூன்று முறை உயிர் தப்பினேன்' முதல் கணவர் பற்றிய உண்மைகளை போட்டுடைத்த நடிகை ரேகா நாயர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் 'ஆண்டாள் அழகர்' என்ற தொடரின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ரேகா நாயர். இந்த நிலையில், தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை பேட்டியொன்றில் மனம்விட்டு பேசியுள்ளார்.

அதன்படி அவர் அளித்த பேட்டியில், 'நான் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தேன். அதன் பிறகுதான் என் வாழ்க்கையை மாற்றினேன். ஐஎஸ்ஏ தேர்வு எழுவதற்காக டெல்லி போகும் போது என் கணவர் சர்டிபிகேட் அனைத்தையும் கிழித்துவிட்டார்.

இதையடுத்து என்ட வாழ்க்கைய முடித்துக் கொள்ள துணிந்தன். ஆனாலும் அந்த நேரத்தில தான் எனக்குள்ள ஒரு பூதம் இருக்கு என புரிந்து கொண்டன். அண்டைக்கு செத்து போய் இருந்தா, நான் இன்டைக்கு அடையாளமே தெரியாமல் போய் இருப்பன். ஆனால், இன்டைக்கு என்ன பத்து பேருக்கு தெரிது.


மேலும், சினிமால நடித்து பிரபலமாகனும், பணம் சம்பாதிக்கணும் என்று நான் விரும்பல. இந்த சமுதாயத்திற்கு உண்மையா இருக்கன். ஆனா இந்த உலகத்தில உள்ளவங்க பொய் பேசுறாங்க. நான் உண்மை சொல்றதால தான் அத அதிகம் பேர் கேட்கிறாங்க' என கூறி முடித்துள்ளார் நடிகை ரேகா நாயர்.

Advertisement

Advertisement