• Dec 26 2024

அத்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சீரியல் நடிகை ஸ்ருதி.. அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து  பிரபலமான நடிகை ஸ்ருதி, தனது அத்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ ’திருமதி செல்வம்’ போன்ற சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆபீஸ்’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி. இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’மாண்புமிகு மாணவன்’ என்ற திரைப்படத்தில் விஜய்யுடன் படிக்கும் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக சீரியல்களில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’லட்சுமி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலில் அவர் மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் வெங்கட் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடித்து வரும் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்து வரும் ரிந்தியா என்ற நடிகையுடன் உருவாக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவை ஸ்ருதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்ருதி, வெண்ணிலாவுக்கு காபி கொடுக்கும்போது அவர் ’நேற்று இரவு உன்னை ரொம்ப திட்டி விட்டேன், சாரி’ என்று கூறுகிறார்.

உடனே ஸ்ருதி, அந்த காப்பியை கொடுங்கள் என்கிறார், ஏன் என்று வெண்ணிலா கேட்க, அதில் சுகர் கம்மியா இருக்கு என்று ஸ்ருதி கூறுகிறார், பரவாயில்லை கம்மியான சுகர் எனக்கு போதும் என்று கூற ’அதில் விஷம் கலந்து இருக்கிறேன்’ என்று கூறிய ஸ்ருதி, அந்த காப்பியை திரும்ப எடுத்துச் செல்கிறார். அப்போது வெண்ணிலா அதிர்ச்சியுடன் இருக்கும் காட்சியுடன் இந்த ரீல்ஸ் வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது என்று ஸ்ருதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ’அத்தையை கொலை செய்த அளவுக்கு நீங்கள் கொடூரமான வில்லியா? என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement