• Mar 06 2025

நடிகை தமன்னாவின் காதல் முடிவுக்கு வந்ததா...? உண்மையை உடைத்த நடிகை!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சமூக ஊடகங்களில் அவர்களின் உறவை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். 

இதனால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவியது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி திடீரென அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் தங்கள் தனிப்பட்ட காரணங்களாலே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக  கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட சொந்த பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தான் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

அத்துடன் தமன்னா சமீபத்திய பேட்டியில் "எல்லா உறவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதென்றில்லை , வாழ்க்கையில் மாற்றங்கள் அவசியம்" எனவும் குறிப்பிட்டார். இந்த செய்தி ரசிகர்களிடையே மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement