• Dec 26 2024

குக் வித் கோமாளி சர்ச்சைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட வைரல் பதிவு..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது  சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளதாம். அதன் பின்பு அக்டோபர் முதல் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக பிரியங்கா,  சுஜிதா, இர்பான் ஆகியோர் இறுதி பைனலிஸ்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பிரியங்கா தான் குக் வித் கோமாளி டைட்டிலை வெற்றி பெற்றுள்ளார்.

அதேநேரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பிரியங்காவுக்கு இடையிலான பிரச்சனை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு பக்கமும் உள்ள நியாயங்களை பலர் தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் பிரியங்கா மீது பலர் வர்மத்தை கொட்ட ஆரம்பித்தார்கள்.


மணிமேகலைத் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணினவர்களையும் சொம்பு என பேசினார். இதனால் விஜய் டிவி பிரபலங்கள் கோபத்தில் அவருக்கு எதிராக தமது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் செருப்பு, துடைப்பம் கட்டை ஆகியவற்றை பதிவாகவும் இட்டார்கள்.

எனினும் பிரியங்கா பக்கத்தில் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை. அவர் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார். பிரியங்கா இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார் என்ற பலரும் காத்திருந்தார்கள் ஆனால் அவர் மௌனம் காத்து வருகின்றார்.

இந்த நிலையில், இந்தப் பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா தனது இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதில் பிரச்சனை பற்றி எதுவும் பேசவில்லை. பீச்சில் தனியாக என்ஜாய் பண்ணுவது போன்று வீடியோவை வெளியிட்டு Back To The Grind என பதிவு செய்துள்ளார். 


Advertisement

Advertisement