தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், ரௌத்திரம், கலகலப்பு 2, கொரில்லா போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ஜீவா.
இவர்களுடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடித்ததோடு ஹாரர் திரில்லர் நிறைந்த படமாகவும் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து பா. விஜய் இயக்கும் அகத்தியா படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் ஜீவா. அதில் அர்ஜுன், ஜோகி பாபு, ராசி கண்ணா, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் 31-ம் தேதி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் ஜீவா அர்ஜுனின் கூட்டணியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அதிக ஆர்வமாய் உள்ளார்கள்.
இந்த நிலையில், அகத்தியா படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது அகத்தியா திரைப்படமும் ஹாரர் திரில்லர் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பழமையான கதையை அம்சத்துடன் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
Listen News!