• Jan 06 2025

அருணின் காதலியுடன் அவுட்டிங் சென்ற பிக்பாஸ் டீம்.! எவ்வளவு குஷியா இருக்காங்க பாருங்க..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது பத்து போட்டியாளர்களே எஞ்சியுள்ளார்கள். இறுதியாக நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ராஜன் வெற்றி பெற்றிருந்தார்.

இன்னொரு பக்கம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக எலிமினேட் ஆன ஜெஃப்ரி, அன்ஷிதா, சத்யா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோவும் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது அதே டீமுடன் பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும் அருணின் காதலியுமான அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது சீரியல் நடிகையான அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இதனை தனக்கு ஏற்ற நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி வெள்ளித் திரையிலும் கால் பதித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றார்.


மேலும் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை உறவினர்கள், நண்பர்கள் சந்திக்க சென்ற நிலையில் அருணுக்கு சார்பாக அர்ச்சனா சென்றிருந்தார். அங்கு அவர்களுடைய காதல் கெமிஸ்ட்ரி பலரையும் வியக்க வைத்திருந்தது. அதன் பின்பு அர்ச்சனா அருணுக்கு சார்பாக பல போஸ்டுகளை பகிர்ந்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது இறுதியாக எலிமினேட்டான ஜெஃப்ரி, அன்ஷிதா, சத்யா ஆகியோர் பிக்பாஸ் அர்ச்சனாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகிய நிலையில், ரசிகர்கள் அவர்களை என்ஜாய் பண்ணுமாறு கமெண்ட் பண்ணி வருகின்றனர்.

Advertisement

Advertisement