• Dec 26 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிக்சன்... மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் ஐஷு அப்பா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்துள்ளது. இதில் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வெளியேறியுள்ளனர். இதன்மூலம் தற்போது மீதம் 8 போட்டியாளர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில், நிக்சன் வெளியேறிய செய்து வெளிவந்த பின் ஐஷுவின் தந்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதில் மகிழ்ச்சியாக Vibe பண்ணுவதாக கூறி எஸ்.ஜே. சூர்யாவின் ரியாக்ஷன் ஒன்றை பதிவு செய்துள்ளார். நிக்சன் வெளியேறியதால் தான் இந்த பதிவை ஐஷுவின் தந்தை வெளியிட்டாரா என்று உறுதியாக தெரியவில்லை.


ஆனால், நிக்சன் வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளிவந்தபின், ஐஷு தந்தை வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. ஐஷுவின் கேம் நன்றாக இல்லாமல் போனதற்கும், அவர் வீட்டில் இருந்து வெளியேறியதற்கும் நிக்சன் தான் காரணம் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement