• Dec 26 2024

அப்போ புரியல.. இப்ப புரியுது.. ஐஸ்வர்யா தோள் மீது கைபோட்ட சௌந்தர்யா கணவர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களின் ஹோலி கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஒரு புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் கழுத்தை சுற்றி சௌந்தர்யாவின் கணவர் கை போட்டுக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

நேற்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். குறிப்பாக ரஜினிகாந்த்துக்கு ஹோலி என்பது ஒரு ஸ்பெஷல் பண்டிகை. ஏனெனில் ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் தான் கே பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி ராவ் என்ற நபருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியின் வீட்டில் நடந்த ஹோலி பண்டிகை குறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு புகைப்படத்தில் சௌந்தர்யா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் அம்மா லதாவுடன் இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தில் கணவர் மற்றும் சகோதரி ஐஸ்வர்யாவும் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் கழுத்தை சுற்றி  சௌந்தர்யா கணவர் விசாகன் கை போட்டுக் கொண்டதற்கு தான் ஏகப்பட்ட கமெண்ட்கள் பதிவாகி வருகிறது ’அப்ப புரியல இப்ப புரியுது’ என்றும் ’அது எப்படி கை மட்டும்’ என்றும் பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement