• Dec 28 2024

கையில் கட்டுடன் அழகு நடை போடும் ஐஸ்வர்யா ராய்! கட்டுக்கு என்ன காரணம்?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு பிரபலங்களும் ஒவ்வொரு வருட அழகு ராணி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி என்ற பட்டத்தை மாற்றி மாற்றி போட்டிபோட்டு பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நடிகை ஐஸ்வர்யா ராய் மாத்திரமே உலக அழகி ஆகும்.


உலக அழகி போட்டியில் முதல் இடம் பெற்று சினிமாத்துறைக்குள் வந்த ஐஸ்வர்யா ராயின் அழகை பார்த்து அவருக்கு உலக அழகி என்ற பட்டத்தையே ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள். இவர் இந்திய அளவில் பிரபலமாக இருந்தாலும் சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.


இவ்வாறு இருக்கையிலேயே சமீபத்தில் இவர் பிரான்ஸ் செல்வதற்காக எயார்போர்ட் வந்த போது கையில் கட்டுடன் வருகை தந்திருந்தார். இது பல கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கையில் கட்டுடன் வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரெட் கார்பெட்டில் நடந்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எனினும் இவரது கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை ஆனால் படப்பிடிப்பின் போது ஏற்ப்பட்ட விபத்தாக இருக்க கூடும் என ரசிகர்களால் கூறப்படுகின்றது 

Advertisement

Advertisement