• Jan 06 2025

செல்ல மகளின் பிறந்த நாளில் அஜித் ஷாலினி வெளியிட்ட க்ளிக்ஸ்..!! அழகில் ஜொலிக்கும் அனோஷ்கா

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

அஜித்குமார் - ஷாலினியின் ஒரே ஒரு மகளான அனோஷ்கா இன்றைய தினம் தனது 17வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடுபலரும்  அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் சிறந்த காதல் தம்பதிகளாக வலம் வரும் அஜித் ஷாலினி ஜோடி அமர்க்களம் படத்தில் நடித்த போது காதலித்து அதன் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 23 வருடங்கள் எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் சிறந்த தம்பதியினராக காணப்படுகின்றனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை தொடங்கிய ஷாலினி அதில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அதில் சிறு வயதில் அவருடைய மகள் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'மை பேபி' என்ற கேப்ஷனும் போட்டிருந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் அனோஷ்காவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


ஏற்கனவே அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான புகைப்படத்தில் ஷாலினியின் அண்ணனும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியும் காணப்பட்டார். ஆனால் தற்போது ஷாலினி வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய குடும்பம் மட்டுமே காணப்படுகின்றது.


Advertisement

Advertisement