• Dec 26 2024

ஐய்யோ நம்ம கோபிக்கு திடீரென என்னாச்சு? கண்ணுமுழி பிதுங்கிடுச்சே.! சந்தேக பேயாக மாறிய ஜெனி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரூம்க்கு வந்த செழியன் முதலில் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்க, ஜெனி கோவத்தில் இருக்கிறார். அதன்பின்பு ஜெனியை சமாதானம் செய்ய, அவர் ஏன் எனக்கு கால் பண்ணி சொல்லல, உண்மையா நீ வேலைக்கு தான் போனியா? இல்ல வேற எங்கையாவது போனியா? என்று சந்தேகப்படுகிறார்.

அதற்குப் பிறகு பாக்கியா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக்  கொண்டிருக்க அவர் சப்பாத்தி, சிக்கன், சிக்கன் 65, பொரியல் என விதம் விதமாக அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுவதை சோபாவில் இருந்த கோபி, என்ன நாய் மாதிரி மோப்பம் பிடிக்கிற கோபி? என தனக்கு தானே புலம்புகிறார்.

எல்லாரும் சிக்கனை கேட்டு கேட்டு சாப்பிடுவதையும், எனக்கு பிடித்த சப்பாத்தி, சிக்கன் குழம்பு என்பதையும் பார்த்து கோபி வாய் உருகிறார். ஆனாலும் ராதிகா இனி வந்து சமைத்து என்ன தரப் போறாளோ தெரியல என புலம்பிக் கொள்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா அங்கு வந்து நான் மையூ கூடவே சாப்பிட்டேன். உங்களுக்கு மசாலா ஓட்ஸ் செய்து கொண்டு வந்து  இருக்கு சாப்பிடுங்க என சொல்கிறார். இதை பார்த்து மசாலா  ஓட்ஸ்சா? எனக் கேட்டுக் கொண்டே, பாக்கியா அங்கு சிக்கன் பரிமாறுவதை பார்த்து புலம்புகிறார்.


மேலும் பாக்கியா நாளைக்கு பழனி சாருக்கு பர்த்டே  அதனால ஸ்பெஷலா ஸ்வீட் செஞ்சிருக்கேன். சாப்பிடு பார்த்து எல்லாரும் எப்படி இருக்கு என்று சொல்லுங்க என எல்லாருக்கும் வைக்க, அதை சாப்பிட்டு விட்டு எழில் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் ஒன்று வைக்குமாறு சொல்ல, செழியனும் ரொம்ப நல்லா இருக்கு என்று எல்லோரும் அதை பாராட்டுகிறார்கள். ஈஸ்வரியும்  நாளைக்கு பழனி சார் வீட்டுக்கு போகணும் அவங்க அம்மா கால் பண்ணினா என பேசுகிறார்.

இதை கேட்ட கோபி கோவப்பட்டு ராதிகாவிடம் பேச,  நீங்க திருந்தவே மாட்டீங்களா என ஓட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த கோபிக்கு பேசிவிட்டு சாப்பாட்டையும் பறித்துக் கொண்டு செல்ல, அப்ப இன்னைக்கு நான் பட்டினியா என புலம்புகிறார் கோபி.

மறுபக்கம்  நைட் செழியன் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஜெனி அவரை எழுப்பி போன் சட்டிங்கில் இது யாரு? யார் கூட சட் பண்ணி இருக்கா? யாருக்கு டியர் என்ன அனுப்பி இருக்கா? அதுல பொண்ணோட போட்டோ இருக்கே என விசாரிக்கிறார். 

இப்போ நைட் இரண்டு மணி என்னவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்ல, அவர் கேட்கவில்லை. அதற்கு அது என்னுடைய பிரண்டு தான். டன் என்று அனுப்பினான் அது டியரா மாறிட்டு. அது என் பிரண்டோட  மனைவியின் போட்டோ. நாளைக்கு அவங்களுக்கு பர்த்டே அதற்காக டிபியில் அவர்ட போட்டோ வச்சிருக்கான் என்று சொல்ல, நம்ப மறுக்கிறார் ஜெனி. ஆனாலும் விடிய கால் பண்ணி உனக்கு ப்ரூஃப் பண்ணுறேன் என்று தூங்குகிறார் செழியன்.

மறுநாள் காலை விடிந்ததுமே ஜெனி முழித்துக் கொண்டு செழியன் எழும்பும் வரை காத்திருந்து, நண்பருக்கு கால் பண்ண, அவர் என்னடா இந்த காலையிலேயே கால் பண்ணுற. இப்பதான் பிள்ளையை தூங்க வச்சுட்டு நானும் தூங்கினேன் என்று சொல்ல, ஜெனி இடையில் நாளைக்கு உங்களோட மனைவிக்கு பர்த்டேயா? நான் விஷ் பண்ணினேன் என்று சொல்லுங்க என சொல்லுகிறார்.  சந்தேகம் தீர்ந்த பின்பு நான் தூங்குறேன் நீ பாப்பாவ பார்த்துக்கொள் என ஜெனி தூங்குகிறார். அவரை செழியன் கலக்கமாக பார்க்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement