• Apr 18 2026

அனுராக்கின் மகள் திருமணத்திற்கு காசு இல்லை; உடனடியாக VJS செய்த காரியம்.?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்தான் அனுராக் காஷ்யப். இறுதியாக இவர் மகாராஜா படத்தில்  நடித்திருந்தார். இவருடைய நடிப்பு பலரை கவரும் வகையில் அமைந்தது. 

தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப்.  எனினும்  இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. 


இதற்கிடையில், அதிரடி த்ரில்லர் படமான ரைபிள் கிளப் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப் இரக்கமற்ற கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில்,  மகள் திருமணத்திற்கு செலவுக்கு கொஞ்சம் கூட காசு இல்லை என எதர்ச்சியாக ஒரு நாள் விஜய் சேதுபதியை சந்தித்தபோது கூறினேன். எனக்கு உடனே மகாராஜா திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்து என் மகளின் திருமணத்தை நிம்மதியாகவும் சிறப்பாகவும்  நடத்த உதவியாக இருந்தார் என விஜய் சேதுபதி பற்றி அனுராக்  கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement